Reporter - சத்யா கோபாலன்
அமெரிக்காவில் பல மாகாண மக்களுக்கும் தபாலில் மர்ம விதைகள் வருவதாகப் பீதி எழுந்துள்ளது. அதை மக்கள் பயன்படுத்த வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,34,985 ஆகவும் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,55,285 ஆகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் கடுமையான நிலைக்கு சீனாதான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமான பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு விதை பார்சல் மொத்த அமெரிக்காவையும் பீதியடைய வைத்துள்ளது.
Reporter - குருபிரசாத்
கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வந்த நிதி நிறுவனம் சதுரங்க வேட்டை பாணியில் ஆசையைத் தூண்டிவிட்டு மோசடி செய்துள்ளது. #Sachin #Tendulkar #Shocking
உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மூலம்தான் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை 1.7 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் 6 லட்சத்தைக் கடந்துவிட்டன. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. இருந்தாலும் இந்தக் கொடிய வைரஸின் ஆபத்தைக் குறைப்பது நம் தனி மனிதரின் பொறுப்பு என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். #who
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India